www.garudabazaar.com

சிக்ஸ் ஃபேக்கில் நடிகை திவ்யபாரதி! அசந்து போன ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை திவ்யபாரதியின் சிக்ஸ் பேக் வீடியோ வைரலாகி வருகிறது.

Divya Bharathi Six Pack Video Went Viral on social media

சினிமாவில் சிவாவின் 10 ஆண்டுகள் - ”இனிதான் ஆரம்பமே” - அனிருத் அளித்த பாசிடிவ் கமெண்ட்

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி. நடிகை திவ்ய பாரதி ஒரிரு தினங்களுக்கு முன் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் நடிகை திவ்யபாரதி தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருநதாரங. இந்த புகைப்படங்கள் பேச்சுலர் படத்தில் கர்ப்பினியாக நடித்த போது எடுத்த BTS படங்கள் என்றும், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான பாத்திரம் என்றும் கூறி இருந்தார்.

Divya Bharathi Six Pack Video Went Viral on social media

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் வீடியோவை பகிர்ந்துள்ளார். சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

Divya Bharathi Six Pack Video Went Viral on social media

மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி நடித்த புதிய படம்...உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றிய முக்கிய உரிமம்! இது வேற லெவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Divya Bharathi Six Pack Video Went Viral on social media

People looking for online information on சிக்ஸ் பேக், திவ்யபாரதி, மதில் மேல் காதல், Bachelor, Divya Bharathi, Six Pack, Social Media will find this news story useful.