அள்ளுதே! Hot போட்டோஷூட் மூலம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த மீரா ஜாஸ்மின்!
முகப்பு > சினிமா செய்திகள்முதல் முறையாக சமூக வலைத்தள பக்கத்தில், நடிகை மீரா ஜாஸ்மின் !

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைத்தள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், தற்போது முதல் முறையாக சமூக வலைத்தளமான இன்ஸ்டா பக்கத்தில் இணைந்திருக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த சண்டக்கோழி, ரன் மற்றும் மலையாள படம் உட்பட, திரையில் மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்ததன் மூலம் , ஒரு சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
தேசிய விருது பெற்ற கலைஞரான இவர் முதல் முறையாக சமூக ஊடக பக்கத்தில் நுழைந்திருக்கிறார். பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் மகள் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல் பதிவாக பகிர்ந்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சத்தியன் அந்திக்காடு இயக்குகிறார்.
ஜெய்பீம் படத்தில் நடிக்க சூப்பர் கண்டிசன் போட்ட பிரபலம்.. அவரே சொன்ன உண்மை
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள இப்படத்தில் ஜெயராமுடன் ஜூலியட் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துவருகிறார்.
நடிகை மீரா ஜாஸ்மின் தனது முதல் பதிவில், வாழ்வின் புதிய தொடக்கத்தில் எல்லோருடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், ரசிகர்களுடன் இணைந்திருப்பது, நமது வளர்ச்சிக்கு எந்தளவு முக்கியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். திரைத்துறை மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பல பிரபலங்கள் மீராவை சமூக வலைத்தள பக்கத்தில் வரவேற்று தங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
வீரமே வாகை சூடும் படத்தின் பெயர் ஏன் அடிக்கடி மாறுச்சு தெரியுமா? போட்டுடைத்த நடிகர்!
காதல் பிசாசாக மக்கள் மனதை கொள்ளையடித்து சென்ற மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர் இதயங்களை கொள்ளை கொள்ளும் வகையில் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். ரன், சண்டகோழி படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதையெல்லாம் ஈடுகட்டும் விதமாக, நிறைய தமிழ் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் பல தமிழ்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது. மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்டாகிராமில் (Instagram) புதிதாக கணக்கு தொடங்கி இன்று ஒரு நாள் முதலே (55K) 55 ஆயிரம் ரசிகர்களை பெற்றுள்ளார், மேலும் இவர் மீண்டும் வந்ததில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.