www.garudabazaar.com

BBUltimate: ‘நான் யாரை ஏமாத்துறேன்? எப்பவுமே என்ன மட்டும் ஏன் இப்படி பண்றாங்க?’.. Vanitha

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss Ultimate, சென்னை, 14, பிப்ரவரி, 2022: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், வனிதா விஜய்குமார் கன்ஃபெஷன் ரூமில் அழுதுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

why everytime pinpoiting me Vanitha Vijayakumar BBUltimate Tamil

வனிதா -ஷாரிக் வாதம்

இந்நிலையில் வனிதாவுக்கும் ஷாரிக் ஹாசனுக்கும் இடையில் தற்போது சிறு சிறு வாக்கு வாதம் முளைத்துள்ளது. அதன்படி ஷாரிக் ஹாசன் ஏதோ சொல்லிவிட, வனிதா ஒவ்வொருவரின் திறமையை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதாக ஷாரிக் ஹாசன் மீது குற்றம் சாட்டியதுடன், வாக்கு வாதத்துக்கும் சென்றார்.

Also Read: அசத்தல்.. ஆரவாரம்.. பிரபல சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுக்கும் குஷ்பு!

என்கிட்ட பேசுங்க மொதல்ல

ஷாரிக்கும், ‘நான் உங்கள சொல்லவே இல்லையே? இப்ப என்ன சொன்னேன் நான், எங்கிட்ட வந்து பேசுங்க.. தைரியம் இருந்தா என்கிட்ட பேசுங்க மொதல்ல’ என சொல்லிக்கொண்டே இருக்க, பதிலுக்கு வனிதாவோ,  ‘உங்கிட்ட பேச முடியாது போடா’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் அதன் பின் பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு சென்ற வனிதா, “இது எந்த விதத்துல நியாயம்? ஏன் ஒவ்வொரு முறையும் என்னை மட்டும் குறி வைக்கிறார்கள். நான் என்ன தப்பு பண்றேன்? நான் யாரை ஏமாத்துறேன் இங்க?” என சொல்லி உருக்கமாக அழுகிறார்.

நான் ஏன் ஜெயிக்க வேண்டும்?- வனிதா

பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை பொறுத்தவரை வனிதா இரண்டு விஷயங்களை முன்னதாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி, “இதற்கு முன்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஒரே பெண்ணான ரித்விகாவும் இளம் பெண், என்னை போன்ற 40 வயது ஆகி, 2 விவாகரத்து ஆன, துணிச்சலான பெண் இல்லை. எனவே என் வெற்றி பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கவேண்டும்!” என கூறியிருந்தார்.

24 மணி நேரமும் என்பதால் வந்தேன்..

இதேபோல், “பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களை போல இந்த ஓடிடி சீசன் இல்லை. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் என்ன நடந்தது என மக்களுக்கு காட்டுவார்கள். இதனால் தான் நான் வந்தேன். இல்லையென்றால், அதாவது முந்தைய சீசன் மாதிரி  1 மணி நேர சீசனாக இருந்திருந்தால், நான் வந்திருக்கவே மாட்டேன்” என வனிதா கூறியிருந்தார்.

Also Read: “பிக்பாஸ்க்கு அப்றம் நிறைய நடந்துருச்சு”.. காதலர் தினத்தில் பிரபல நடிகை  விவாகரத்து.. ரசிகர்கள் ஷாக்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

why everytime pinpoiting me Vanitha Vijayakumar BBUltimate Tamil

People looking for online information on Bigg Boss Ultimate, Vanitha Vijayakumar will find this news story useful.