www.garudabazaar.com

மாளவிகா மோகனனிடம் காதலர் தினத்தில் LOVE YOU சொன்ன ரசிகர்.. அதற்கு நடிகை கொடுத்த சூப்பர் ரிப்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாளவிகா மோகனிடம் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் LOVE YOU சொல்ல மாளவிகா மோகனனும் அதற்கு பதில் அளித்துள்ளார்.

Malavika Mohanan interact twitter session with her fans

காதலர் தினத்தில்.. அசத்தல் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளியான சர்ப்ரைஸ் வீடியோ

தற்போது தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார்.

Malavika Mohanan interact twitter session with her fans

இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

Malavika Mohanan interact twitter session with her fans

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் டிவிட்டரில் 50000 லைக்குகளை தாண்டின.

Malavika Mohanan interact twitter session with her fans

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் ரசிகர்களுடன் நடிகை மாளவிகா மோகனன் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விக்கும் நடிகை மாளவிகா பதில் அளித்தார்.

Malavika Mohanan interact twitter session with her fans

அதில் ஒரு ரசிகர் நடிகையிடம், நீங்கள் கமிட்டடா? இல்லை சிங்கிளா? என கேள்வி எழுப்ப அதற்கு மாளவிகா மோகனன், "கமிட்டடா இருந்தா நான் ஏன் லவ்வர்ஸ் டே அன்னைக்கு உங்க கூட டிவிட்டரில்ல பேசிட்டு இருக்க போறேன்? நான் சிங்கிள் தான்" என பதில் அளித்தார்.

அல்லு அர்ஜூன்  பற்றிய கேள்விக்கு மாஸ் என பதில் அளித்தார். மேலும் மகேஷ் பாபுவுடன் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் பதில் அளித்தார்.

தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு, மாஸ்டர்கிளாஸ் எனவும், தனுஷ் உடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.  

விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், ஒரு காதல் கதையில் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் மாளாவிகா மோகனன் கூறினார்.

ரசிகர் ஒருவர் LOVE YOU என கூறி பதில் அளிக்க ரசிகர் ஒருவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற மாளவிகா மோகனன், அந்த ரசிகருக்கு ஹாய் என கூறி சிவப்பு நிற இதய எமோஜியை ரிப்ளேவாக கொடுத்தார். 

சமீபத்தில் மிகவும் பிடித்த பாடலாக புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலை குறிப்பிட்டு, சித் ஸ்ரீ ராமின் குரலை பாராட்டினார் நடிகை மாளவிகா மோகனன்.

மாறன் படத்தின் ரிலீஸ் குறித்த கேள்விக்கு, "தானும் ரிலீஸ்க்கு ஆர்வமாக இருப்பதாகவும், ரிலீஸ் தேதி தெரிஞ்சா சொல்லுங்க" என்றும் கூறினார்.

Malavika Mohanan interact twitter session with her fans

 

காதலர் தினத்தில் ரொமாண்டிக் சர்ப்ரைஸ்.. பனியே உறைந்து போகும் காதல் ப்ரபோஸ்.. Radhe Shyam Glimpse!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan interact twitter session with her fans

People looking for online information on Allu Arjun, Dhanush, Maaran, Mahesh Babu, Maladives, Malavika, Malavika Fans, Malavika Mohanan, Valentines Day, Vijay will find this news story useful.