www.garudabazaar.com

புது வீட்டில் தனுஷ்.. தனது ரசிகர்களை குடும்பத்துடன் வரவழைத்து சந்திப்பு! நெகிழ்ச்சியான PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது புதிய வீட்டில் ரசிகர்களை சந்தித்துள்ளார்.

Dhanush With his fans club members at New House

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள்.. இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளார்களா!?..

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ் - தெலுங்கில் வெளியான 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார்.

பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆன  இந்த படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 51 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Dhanush With his fans club members at New House

Images are subject to © copyright to their respective owners.

வாத்தி படத்தை அடுத்து நடிகர் தனுஷ், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

Dhanush With his fans club members at New House

Images are subject to © copyright to their respective owners.

இந்த படங்களை அடுத்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு கட்டி தமது பெற்றோருக்கு வழங்கிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.  இயக்குனர் சுப்ரமணிய சிவா தமது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

Dhanush With his fans club members at New House

Images are subject to © copyright to their respective owners.

மேலும் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகளை புதிய வீட்டில் தனுஷ் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் ரசிகர் மன்றத்தை சார்ந்த ராஜா என்பவர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை அவர்களது குடும்பத்தினருடன் தனுஷ் அழைத்து புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை வெளியிட்டு தனுஷ் ரசிகர் ராஜா, "மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம். நன்றி சார்" என ட்வீட் செய்துள்ளார்.

Also Read | 4 மொழிகளில்.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'.. எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush With his fans club members at New House

People looking for online information on Dhanush, Dhanush With his fans club members will find this news story useful.