விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் அவருடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஆரம்பக்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முடிந்தவுடன் தலைவர் 168 டீம் தற்போது சென்னை திரும்பி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் இண்ட்ரோ சாங்குக்கு பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இவர் விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' தொடங்கி, சுறா, குருவி, வேலாயுதம், மெர்சல் ஆகிய 5 படங்களிலும்; அஜித்தின் 'வீரம்' படத்திலும் நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது பியர் க்ரில்சுடன் Into the Wild with Bear Grylls முதல் எபிசோடை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ள ரஜினி விரைவில் தலைவர் 168 படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.