தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என தகவல் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சாந்தனு, ஆன்ட்ரியா, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி கோலிவுட்டை ஆக்கிரமித்திருந்தது. அருண்ராஜா காமராஜ், பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், மோகன்ராஜா என பலரின் பெயர் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் விஜய் 65 படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. விஜய்யை சந்தித்து அவர் கதை சொல்லியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில், விஜய் 65 படத்தின் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் என்று தற்போது கூறப்படுகிறது. சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜிவி.பிரகாஷே, அவர் அடுத்து விஜய்யை வைத்து எடுக்க போகும் படத்திற்கும் இசையமைப்பார் என தெரிகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க போவதாகவும் கூறப்படுகிறது.
தெறி காம்போ மீண்டும் இணைந்தால் தியேட்டரில் வெறி தான்..