பிக்பாஸ் ஸ்டாருக்கு தன் காதலியுடன் நாளை கல்யாணம் - வெளியிட்ட ஸ்பெஷல் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்தல அஜித்தின் 'மங்காத்தா', விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பரீட்சையமானவர் மகத்.

அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பிராச்சியின் புகைப்படத்தை பகிர்ந்து நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார். திருமணத்துக்கு ஒருநாள் இருக்கையில் நான் இதனை நினைத்து பார்க்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
நான் உன்னுடன் ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் கழித்தேன். வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலாக இருக்கிறேன். நமக்கு வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்று தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.