'மாஸ்டர்' நடிகர் வெளியிட்ட வீடியோ , ''''கொய்யால'', இவன் எலிய உயிரோட சாப்பிட்றான்''
முகப்பு > சினிமா செய்திகள்'ஃபிரெண்ட்ஸ்', 'சேது', 'தீனா' உள்ளிட்ட படங்களில் நடிகர் ஸ்ரீமனை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. தனது ஒவ்வொரு வேடத்தையும் வெரைட்டியான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டாருடன் 'தர்பார்' படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து அவர், 'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் தொலைபேசி எண்ணை பகிர்ந்திருந்தார்.
இதன் ஒருபகுதியாக நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில், வெளிநாட்டவர் ஒருவர் உயிர் உள்ள எலியை சாப்பிடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் தற்போது சீனா அதிர்ந்து போய் கிடப்பது குறிப்பிடத்தக்கது.
கொய்யாலா pic.twitter.com/OH2JMwNR4O
— actor sriman (@ActorSriman) January 28, 2020
கரோனா வைரஸ் நோய் தொடர்பான விவரங்களை கேட்டறிய மத்தியஅரசு 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
911123978046 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
— actor sriman (@ActorSriman) January 27, 2020