சூப்பர் ஸ்டார் ரஜினி-பியர் க்ரில்ஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ’மேன் Vs வைல்ட்’ இல்லையாம்!
முகப்பு > சினிமா செய்திகள்டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான Man Vs Wild தொடருக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் ’டப்’ செய்யப்பட்டு வெளியான இந்த நிகழ்ச்சிக்கு நம் ஊரிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. உலகெங்கிலும் மனிதன் வாழ சவாலான காடு, சதுப்பு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் உயிர்பிழைப்பது குறித்து பிரிட்டணைச் சேர்ந்த பியர் க்ரில்ஸ் அந்நிகழ்ச்சியில் நேரடி பயணம் மூலம் சித்தரித்து காட்டுவார்.
பசியால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் காட்டு உயிரிகளை உண்பது, கடக்க முடியாத பாதைகளில் செல்ல நூதன வழிமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இந்த ஷோவுக்கு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியை உலகெங்கும் 3.6 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கண்டுகளித்துள்ளனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாத் தன் இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக கலந்துகொண்டுள்ளார். முதல் எபிசோடின் ஷூட்டை முடித்து விட்டு திரும்பிய ரஜினிக்கு சிறிய முட்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து ரஜினி குறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள பியர் க்ரில்ஸ் ஒரு பதிவில் இந்த நிகழ்ச்சியின் பெயரை 'இண்டு த வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்' என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை தொலைகாட்சியில் ஒளிபரப்ப ரஜினி ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர்.
After our episode with Prime Minister @NarendraModi of India helped create a bit of TV history, (3.6 billion impressions), superstar @Rajinikanth joins me next, as he makes his TV debut on our new show #IntoTheWildWithBearGrylls on @DiscoveryIN. #ThalaivaOnDiscovery pic.twitter.com/WKscCDjPZc
— Bear Grylls (@BearGrylls) January 29, 2020