’மாஸ்டர்’ விஜய் – விஜய் சேதுபதியின் க்ளைமாக்ஸ் ஷூட் இதை முடிந்த உடன் தொடங்குகிறதாம்!
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் 3வது லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா, மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி, ஷிமோகா, சென்னை என்று பல்வேறு இடங்களில் மாஸ்டர் ஷூட் நடைபெற்று வந்தது. தற்போது ப்ரீ-க்ளைமாக்ஸ் காட்சிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெய்வேலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது முடிந்த கையோடு க்ளைமாக்ஸ் ஷூட் குறித்த விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப் படுகிறது. மாஸ்டர் படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் அனைத்து வேலைகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.