டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான Man Vs Wild தொடருக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் ’டப்’ செய்யப்பட்டு வெளியான இந்த நிகழ்ச்சிக்கு நம் ஊரிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. உலகெங்கிலும் மனிதன் வாழ சவாலான காடு, சதுப்பு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் உயிர்பிழைப்பது குறித்து பிரிட்டணைச் சேர்ந்த பியர் க்ரில்ஸ் அந்நிகழ்ச்சியில் நேரடி பயணம் மூலம் சித்தரித்து காட்டுவார்.
பசியால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் காட்டு உயிரிகளை உண்பது, கடக்க முடியாத பாதைகளில் செல்ல நூதன வழிமுறைகளை மேற்கொள்வது ஆகியவை இந்த ஷோவுக்கு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது உலகெங்கும் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ஷூட் செய்ய பியர் க்ரில்ஸ் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபூருக்கு வந்துள்ளார். ரஜினிகாந்தின் இமைய மலைப்பயணத்தை ஊடகங்கள் பரவலாக பேசிய நிலையில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கும் பெரிய கவனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
British adventurer Bear Grylls arrives at Bandipur forest in Karnataka for a shoot with actor Rajinikanth for an episode of his show 'Man vs Wild'. pic.twitter.com/mIkSrOARSz
— ANI (@ANI) January 28, 2020