www.garudabazaar.com

போடு.! மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்.. டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது.‌

Mari Selvaraj Next Movie Titled Vaazhai

Also Read | Bigg Boss வீட்டின் இந்த வார தலைவரான மைனா நந்தினி.. "ஏத்துக்க மாட்டேன்" - தனலெட்சுமி!

இயக்குனர் ராமின் உதவியாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்ட மாரி செல்வராஜ், இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்தது.

இதையடுத்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்ணன் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது.

தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில்  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்  ‘மாமன்னன்’ படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார் .

இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கியது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் மாமன்னன் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். வாழை  என இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாழை மர தோப்பின் பின்னணியில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். மாரி செல்வராஜ் இந்த படத்தினை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

Also Read | BABA: டிஜிட்டல் முறையில் மீண்டும் எடிட் செய்யப்பட்டு ரிலீஸாகும் பாபா.. செம்ம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Mari Selvaraj Next Movie Titled Vaazhai

People looking for online information on Mari Selvaraj, Mari Selvaraj Next Movie, Santhosh Narayanan, Vaazhai will find this news story useful.