www.garudabazaar.com

தெலுங்கு நடிகர் நாக சவுர்யா & அனுஷா ஷெட்டிக்கு டும்டும்.!!.. ரசிகர்கள் வாழ்த்து Naga Shaurya Anusha Shetty Wedding

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் நாக சவுர்யா. கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த 'Cricket Girls And Beer' படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தியா' என்ற படத்தில் சாய் பல்லவியின் கணவராக நடித்தார்.

Naga Shaurya tie knot with Anusha Shetty grand wedding ceremony

தொடர்ந்தும் பல படங்களில் கமிட் ஆகியுள்ள இவர்,  தற்போது டோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.. இந்நிலையில்தான் நடிகர் நாக சவுர்யாவிற்கும், பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டிக்கும் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.  நாக சவுர்யாவின் நீண்ட கால தோழியான அனுஷா ஷெட்டிக்கும் அவருக்கும் இடையே பெங்களூருவில் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் முன்னிலையில் நடந்துள்ளது.

Naga Shaurya tie knot with Anusha Shetty grand wedding ceremony

திருமணத்துக்கு பின்னர் இந்த ஜோடி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக நாக சவுர்யா, “எனது வாழ்நாள் முழுவதற்கும் உரிய பொறுப்பை உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன்” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

முன்னதாக இந்த திருமணத்தையொட்டி மெகந்தி, உணவு விருந்து உள்ளிட்டவையும் பெங்களூருவில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்களும், அதனை தொடர்ந்து இவர்களின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் ரசிகரள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Naga Shaurya tie knot with Anusha Shetty grand wedding ceremony

People looking for online information on Anusha Shetty Wedding, Naga Shaurya Anusha Shetty, Naga Shaurya Anusha Shetty Wedding, Naga Shaurya marries Anusha Shetty, Naga ShauryaWedding will find this news story useful.