www.garudabazaar.com

Gulu Gulu: 'மாட்னா காலி', 'அம்மா நாநா' .. மிரட்டிய சந்தோஷ் நாராயணன் - ரத்னகுமார் பேட்டி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும், விக்ரம, மாஸ்டர் படங்களின் எழுத்தாளருமான ரத்னகுமார் இயக்கத்தில் "குலு குலு"  திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Rathnakumar about Gulu Gulu Santhosh narayanan music

Also Read | சந்தானம் நடிக்கும் 'குலு குலு.'. சந்தோஷ் நாராயணனின் ஜாலியான நடனத்தில் 'மாட்னா காலி' VIDEO பாடல்!

இந்த படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த குலுகுலு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல டிவி சேனலான சன்.டிவி. கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Rathnakumar about Gulu Gulu Santhosh narayanan music

டார்க் ஹியூமர் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையும் ஒரு முக்கிய பங்காக அமைந்துள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நராயணன் இசையமைத்துள்ளார். குறிப்பாக இசையின் மூலம் படத்தை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறார். காட்சிக்கு காட்சி காமிக் மியூசிக் மூலம் சுவை சேர்ப்பதுடன், 'மாட்னா காலி', 'அம்மா நாநா' போன்ற ரசிக்க வைக்கும் லத்தீன் அமெரிக்க ஜாஸ் மியூசிக் வகையறா பாடல்களுக்கு இணையான பாடல்களை கொடுத்திருகிறார்.

Rathnakumar about Gulu Gulu Santhosh narayanan music

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் பற்றி பேசும் இயக்குநர் ரத்னகுமார்,  “இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேற.. அவரை பற்றி நிறைய பேசலாம். நடிக்குற ஐடியா இருந்தால், நான் தான் படம் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டேன். அவர் எப்பவுமே தக் லைஃப் தான். ஒரிஜினல் கேரக்டர் அவர். இந்த படத்தில் இன்னர் பீஸ் என ஒரு பாடல் வரும். அந்த பாடல்தான் அவர்.

மாட்னா காலி.. மாட்ற வரைக்கும் ஜாலி என சொல்லி பாடலின் ஆடை, செட் உட்பட இறங்கி பணிபுரிந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Gulu Gulu: "எப்படி அழறீங்கனு சந்தானத்திடம் கேட்டேன்.!" - மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்.!

GULU GULU: 'மாட்னா காலி', 'அம்மா நாநா' .. மிரட்டிய சந்தோஷ் நாராயணன் - ரத்னகுமார் பேட்டி. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rathnakumar about Gulu Gulu Santhosh narayanan music

People looking for online information on Google, Gulu Gulu, Rathnakumar, Santhanam will find this news story useful.