Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

Enjoy Enjaami -க்கு பிறகு அறிவு & சந்தோஷ் நாராயணன் .. வெளியான கீச்சே கீச்சே பாடல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும், குரல் கலைஞராகவும் பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஆண்ட்ரியா.

After Enjoy Enjaami Arivu Santhosh Narayanan Keeche Keeche Song

நடிகையாக ஆண்ட்ரியா நடித்த தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்கள் அவருக்கு கூடுதல் பாராட்டுகளை பெற்றுத் தந்தன. அண்மையில் விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' , சுந்தர்.சியின் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் தோன்றி இருந்த நடிகை ஆண்ட்ரியா, இப்படங்களை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 மற்றும் வேறு இயக்குநர்களின் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அண்மையில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து ஆண்ட்ரியா இடம் பெறும் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

என்சாய் எஞ்சாமி பாடலைத் தொடர்ந்து தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலில் இணைந்துள்ளனர். ஆம், தெருக்குரல் அறிவு வரிகள் எழுத, இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடலை மீனாக்‌ஷி இளையராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர்.

வித்தியாசமான விஷூவல் மற்றும் கதைக்களத்தில், கீச்சு கீச்சு என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

After Enjoy Enjaami Arivu Santhosh Narayanan Keeche Keeche Song

People looking for online information on Amal Meley Pani Thuli, Andrea, Arivu, Enjoy Enjaami, Grass Root Film Company, Keeche Keeche, Santhosh Narayanan, Vetrimaaran will find this news story useful.