www.garudabazaar.com

அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல்.. இது திருச்சிற்றம்பலம் ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் - சந்தோஷ் நாராயணன் திருச்சிற்றம்பலம் படத்திற்காக இணைந்துள்ளனர்.

Anirudh Santhosh Narayanan Coming Together for Thiruchitrambalam

Also Read | அடடே..தனுஷ் நடிக்கும் 'வாத்தி'‌பட ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல இந்திய நிறுவனம்!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை தாய் கிழவி, மேகம் கருக்காதா, லைப் ஆஃப் பழம் எனும் 3 சிங்கிள் பாடல்கள்  வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் 4வது சிங்கிள் பாடல் "தேன் மொழி' நாளை வெளியாகிறது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். புதிய போஸ்டர் மூலம் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Anirudh Santhosh Narayanan Coming Together for Thiruchitrambalam

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

Anirudh Santhosh Narayanan Coming Together for Thiruchitrambalam

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Anirudh Santhosh Narayanan Coming Together for Thiruchitrambalam

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.

Also Read | இந்த ஜூலை கடைசி வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh Santhosh Narayanan Coming Together for Thiruchitrambalam

People looking for online information on Anirudh, Dhanush, Santhosh Narayanan, Thiruchitrambalam Movie will find this news story useful.