www.garudabazaar.com

Bigg Boss வீட்டின் இந்த வார தலைவரான மைனா நந்தினி.. "ஏத்துக்க மாட்டேன்" - தனலெட்சுமி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

BIGGBOSS Season 6 Tamil Day 43 Today Show Glimpse

Also Read | BABA: டிஜிட்டல் முறையில் மீண்டும் எடிட் செய்யப்பட்டு ரிலீஸாகும் பாபா.. செம்ம அப்டேட்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

BIGGBOSS Season 6 Tamil Day 43 Today Show Glimpse

பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது. எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு  பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும். இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக நடிகர் ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.   இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அசல் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். கடந்த இருவாரம் முன்பு ஷெரினா வெளியேறினார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை   மகேஸ்வரி எலிமினேட் ஆகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த வாரம் நிவாஷினி எலிமினேட் ஆகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

BIGGBOSS Season 6 Tamil Day 43 Today Show Glimpse

பரபரப்பான இச்சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 43வது நாள் புதிய ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் மைனா இந்தவாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருப்பார் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இச்சூழலில் ஆயிஷா படுக்கையில் இருக்கும் தனலெட்சுமியை சந்திப்புக்கு அழைக்கிறார். தனலெட்சுமி அழ ஆரம்பிக்க அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கிறார்கள். அப்போது தனலெட்சுமி, "யார் தலைவர், நான் யாரையும் தலைவரா ஏத்துக்க மாட்டேன்" என்று கூறுகிறார். மேலும் ரச்சிதா மற்றும் தனலெட்சுமி இடையேயான உரையாடலும் இந்த வீடியோவில் அமைந்துள்ளது.  தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த ப்ரோமோ வைரலாகி வருகின்றது.

 

Also Read | மனைவி ஷாலினியின் பிறந்தநாள்.. குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்குமார்! வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Season 6 Tamil Day 43 Today Show Glimpse

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmim, Myna Nandhini, Vijay Television, Vijay tv will find this news story useful.