தனுஷ் படத்துக்காக பிரபல இசையமைப்பாளருடன் லண்டன் பறந்த பரியேறும் பெருமாள் இயக்குநர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 25, 2019 11:22 AM
இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.
இந்த படத்துக்கு கர்ணன் என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜீஷா விஜயன் நடிக்கவிருப்பதாக நாம் முன்பே அறிவித்திருந்தோம் இவர் மலையாளத்தில் அனுராக கரிக்கின் வெள்ளம், ஜூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தனுஷிடம் நேரடியாக விவாதிக்க இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது லண்டன் சென்றதாகவும் அங்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷிடம் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் தனுஷிடம் ஆலோசனை பெற்ற பின்னர் அவர் மீண்டும் சென்னை திரும்பி படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.