"ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும்"- பார்த்திபன்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 25, 2019 10:42 AM
பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் நிறுவனம் சார்பில் பார்த்திபன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு. இந்த படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். வேறு நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவல்லை. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் பார்த்திபன் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: # OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
# OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து
போடுவதும்,பார்ப்பதும்
அருவருப்பான செயல்!ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு!Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது pic.twitter.com/3FyiuS9fYp
— R.Parthiban (@rparthiepan) September 24, 2019