“அசுரன பார்த்தேங்க சார்..” ரசிகரின் தெனாவெட்டான கேள்விக்கு பார்த்திபன் நறுக் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'அசுரன்' படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது..

Director R.Parthiban About Dhanush Vetrimaaran Asuran Trailer

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில்  டிவிட்டரில் உள்ள பார்த்திபனிடம்  ஒருவர் அசுரன் படத்தின் ட்ரெய்லர் பார்த்தீங்களா என்று தரக்குறைவாக கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அதற்கு சற்றும் கோபப்படாமல்  நடிகர் பார்த்திபன் தனக்கே உரிய பாணியில்

பார்த்தேங்க சார், அசுரத்தனமா இருந்தது. தனுஷ் பர்ஃபாமன்ஸ் சூப்பர். இயக்குனருக்கு 6மணிக்கே மெசேஜ் அனுப்புனேங்க சார்! மற்றும்,'a journey of fakir' பாத்துட்டு (துட்டு குடுத்து) நான் கை தட்னது ஊருக்கே கேட்டுது! என்று பதிலடி கொடுத்துள்ளார்.