லண்டனில் தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த இந்த National Award Winner

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்துக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார்.

National Award-winning actor Joju George joins Dhanush-Karthik Subbaraj film in London

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரும் தேசிய விருது பெற்றவருமான ஜோஜூ ஜார்ஜ் நடிக்க விருப்பதாக அறிவித்துள்ளது. இவர் ஜூன், வைரஸ் போன்ற படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்கவை.