KAAPAN USA OTHERS

“கடைசி வேலையும் முடிஞ்சது..”- தனுஷின் ‘அசுரன்’ குறித்து ராட்சசி பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்'. இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Ammu Abhirami Final Dubbing session Manju Warrier Dhanush Asuran

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது அசுரன் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.  மஞ்சுவாரியர் மற்றும் அபிராமி இருவரும் ஒரே நாளில் டப்பிங் பேச வந்துள்ளனர். அங்கே எடுத்த செல்ஃபி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.