"நமக்கு தேவையானத அடிச்சு வாங்கணும்" தனுஷ் 'அசுரன்' ட்ரெய்லர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 08, 2019 05:46 PM
வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'அசுரன்' படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'அசுரன்'. 'வட சென்னை'க்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு வெற்றி மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க, பிரகாஷ் ராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து பொல்லாத பூமி, கத்திரிப் பூவழகி என இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
"நமக்கு தேவையானத அடிச்சு வாங்கணும்" தனுஷ் 'அசுரன்' ட்ரெய்லர் இதோ! வீடியோ