இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட உதயநிதி - மிஷ்கினின் 'சைக்கோ' டீஸர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 25, 2019 04:22 PM
'கண்ணே கலைமானே' படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் 'சைக்கோ'. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு முதலில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் ஒலிப்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட உதயநிதி - மிஷ்கினின் 'சைக்கோ' டீஸர் இதோ வீடியோ
Tags : Mysskin, Udhayanidhi Stalin, Psycho, Ilaiyaraaja