'பிரபல ஹீரோவுக்காக முதன் முறையாக அப்பாவுடன்...' - இளையராஜாவுடன் இசையமைப்பது குறித்து யுவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன். இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Yuvan Shankar Raja and Ilaiyaraaja about Vijay Sethupathi's Maamanithan

இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். 

இதனையடுத்து தர்மதுரைக்கு பிறகு இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா ஹார்மோனியம் இசைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், முதல் முறையாக நானும் அப்பாவும் இணைந்து  வேலை செய்துள்ளோம். இசை ரசிகர்களை மாமனிதன் பாடல்கள் நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.