தல அஜித்தின் நேர்கொண்ட பார்வைக்காக களமிறங்கும் உதயநிதி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 03, 2019 11:47 PM
தல அஜித் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாவிருக்கிற படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நேர்கொண்ட பார்வை படத்தை சென்னை சிட்டி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.