மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் 'சைக்கோ' - டீசர் அப்டேட் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 21, 2019 11:42 AM
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் 'சைக்கோ'. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு முதலில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் ஒலிப்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.
Get ready to be absolutely psyched. 5 days for the Teaser launch!! #PsychoTheMovie #Mysskin #Ilaiyaraaja #Udhayanithi #Aditiraohydari #Nithyamenen #Teaserlaunch #ArunMozhiManickam @udhaystalin @aditiraohydari @menennithya @doubleMprod_ @director_ram @sureshchandraa @donechannel1 pic.twitter.com/uFVdU2stvH
— Double Meaning Production (@DoubleMProd_) October 20, 2019