உதயநிதி - விக்ராந்தின் 'பக்ரீத்' படத்தில் இருந்து சில நிமிட காட்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 20, 2019 02:02 PM
விக்ராந்த், வசுந்தரா உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் பக்ரீத். இந்த படத்தை எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடுகிறார்.

ஜெகதீசன் சுபு எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ரூபன் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் இந்தியாவில் ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள முதல் படம் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது. பள்ளி முடித்து வரும் சிறுமியிடம் மற்றொரு சிறுவன், 'உன் அப்பா ஒட்டகம் வாங்கிட்டு வந்துருக்காரு' என்று சொல்ல அந்த சிறுமி அவசரகதியில் வீட்டிற்கு செல்கிறாள். அங்கே அவரது அம்மாவான வசுந்தரா தனது மகளுக்கு ஒட்டகத்தை மிகப் பரிவுடன் காட்டுவது போல் அந்த காட்சி இடம் பெற்றுள்ளது.
உதயநிதி - விக்ராந்தின் 'பக்ரீத்' படத்தில் இருந்து சில நிமிட காட்சி வீடியோ