‘கைதி’ படத்தின் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சி - புரொமோ வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 25, 2019 04:17 PM
'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படம் தீபாவளி பண்டிகையொட்டி இன்று (அக்.25) உலகம் முழுவதும் ரிலீசானது.

கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘கைதி’ திரைப்படத்தில் குறிப்பாக நரேன் மற்றும் வில்லனாக நடித்துள்ள ஜார்ஜ் மரியனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், அப்பா-மகள் பாசத்தையும், அதிரடி ஆக்ஷனையும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தின் அனல் பறக்கும் ஸ்டண்ட் காட்சி இடம்பெற்றுள்ள புரொமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
#Kaithi #KaithiFromToday #KaithiDiwali pic.twitter.com/5QKYJe1sdX
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 25, 2019