'காஷ்மீர் உங்களை நினைத்து பெருமைப்படும்' - உதயநிதி ஸ்டாலின் படம் குறித்து பிரபலம் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 09, 2019 05:40 PM
'கண்ணே கலைமானே' படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' என்ற படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
![PC Sreeram Emotional at Myskkin, Udhayanidhi Stalin's Psycho PC Sreeram Emotional at Myskkin, Udhayanidhi Stalin's Psycho](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/pc-sreeram-emotional-at-myskkin-udhayanidhi-stalins-psycho-photos-pictures-stills.jpg)
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நிதியா மேனன், அதிதி ராவ் ஹிதாரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குநர் ராம் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் இருந்து சித் ஸ்ரீராம் பாடிய பாடல் பதிவு ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதனை இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மிஷ்கின் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் ''வாழ்த்துகள் தன்வீர். இந்த படத்தின் டிஐ பற்றி கேள்விப்பட்டேன். தேவைப்பட்டால் மிஷ்கின் உங்களை வழிநடத்துவார் . அவர் என்னை புரிந்துகொள்வார். அலர்ஜி பிரச்சனை இறுக்கிறது.
நீ தான் 99 சதவிகிதம் நீதான் இந்த படத்தில் முடித்திருந்தீங்கள். உன் பெயர் தான் படத்தில் வர வேண்டும். உங்களுடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மிஷ்கின் மற்ற படக்குழுவினர் உங்களுடன் ஒத்துழைப்பு வழங்குவார்கள். காஷ்மீர் உங்களை நினைத்து பெருமைப்படும்'' என்றார்.