தனது கலகலப்பான, துள்ளலான பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மணிமேகலை. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் திகழும் மணிமேகலை தற்போது காமெடி ஷோக்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சுவாரஸ்யமான பதிவுகளை இடுவதை மணிமேகலை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் கூட இவரின் குக்கர் வீடியோ அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது பிரபல தொகுப்பாளரான டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் மணிமேகலை தன்னுடைய கணவரான ஹுசைனுடன் கலந்து கொண்டார். அதில் நடன கலைஞரான ஹுசைன் தனது பாணியில் வேகமான நடனமாட, கணவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் மணிமேகலை திக்கு முக்காடி போனார் .
இதையடுத்து தற்போது மணிமேகலை சபதம் ஒன்றை எடுத்துள்ளார். அதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மொதல்ல இந்த நடனத்தை கத்துக்கணும், அப்படி இல்லை இந்த டான்ஸ் ஆட தெரிஞ்ச பயலுகளோடு ஷோ பண்ணக்கூடாது. இது தெரியாம ரொம்ப பப்பி ஷேம் ஆகிடுச்சு... பெரிய டான்சரா வந்து காமிக்கிறேன்” என தெரிவித்து இருக்கிறார்.