''சென்னைய குளோஸ் பண்ணிட்டிங்களா ?.. ஊருக்குள்ள விடமாட்டிங்களா ?'' - பிரபல தொகுப்பாளர் கவலை
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ( மார்ச் 22 ) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தார்.

இதனை தமிழக அரசு இன்று காலை 5 மணி வரை நீட்டித்திருந்தது. மேலும் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வருகிற மார்ச் 31 வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன மாவட்டங்களுக்கு மட்டும் பிரத்யேகமாக ஏன் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னது சென்னை பார்டர குளோஸ் பண்ணிட்டாங்களா ? அப்போ 31 ஆம் தேதி வரைக்கும் கிராமம் தானா என்ன ஊருக்குள்ள விடமாட்டாங்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.