www.garudabazaar.com

மாலத்தீவுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் மாளவிகா மோகனன்.. கடலிலிருந்து பகிர்ந்த வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Travelling to Maldives

Also Read | கதிரவன் புகார்.. BIGG BOSS கொடுத்த TWIST.. "இதெல்லாம் ஒரு கேஸ்".. பொங்கிய தனலெட்சுமி!

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன்  தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

Malavika Mohanan Travelling to Maldives

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.

Malavika Mohanan Travelling to Maldives

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Malavika Mohanan Travelling to Maldives

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

Malavika Mohanan Travelling to Maldives

இந்நிலையில் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கடல் மார்க்கமாக மாலத்தீவுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்தாண்டு மாளவிகா மோகனன் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றதும் அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Also Read | காயத்துக்கு மீண்டும் சிகிச்சை எடுக்கும் பூஜா ஹெக்டே.. அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Travelling to Maldives

People looking for online information on Malavika Mohanan, Maldives will find this news story useful.