www.garudabazaar.com

மாளவிகா மோகனன்.. சரவெடி தீபாவளி போட்டோஷூட்.. வைரலாகும் TRADITIONAL லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனின் தீபாவளி போட்டோஷூட்  புகைப்படங்கள்  வெளியாகி உள்ளன.

Malavika Mohanan Diwali Photo Shoot Viral Pics

Also Read | விமல் நடிப்பில் புதிய படம் இயக்கும் விஜய் பட இயக்குனர்.. வர்ற பொங்கலுக்கு ரிலீஸா?

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

Malavika Mohanan Diwali Photo Shoot Viral Pics

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

Malavika Mohanan Diwali Photo Shoot Viral Pics

அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

Malavika Mohanan Diwali Photo Shoot Viral Pics

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Malavika Mohanan Diwali Photo Shoot Viral Pics

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல போட்டோ கிராபர் செல்டன் சந்தோஷ் உடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புனித்பலானா நிறுவனத்தின் பாரம்பரிய உடையில் மாளவிகா மோகனன் தோன்றியுள்ளார். ஹவுஸ் ஆஃப் ஷிகா நிறுவனத்தின் நகைகளையும் மாளவிகா மோகனன் அணிந்துள்ளார்.

Also Read | "சொடக்கு மேல சொடக்கு".. ஜி.பி. முத்துவின் வெறித்தனமான டான்ஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Diwali Photo Shoot Viral Pics

People looking for online information on மாளவிகா மோகனன், Malavika Mohanan, Malavika Mohanan Diwali Photo Shoot will find this news story useful.