www.garudabazaar.com

"இதுவரைக்கும் நான் நடிக்காத கேரக்டர்".. 'தங்கலான்' பற்றி முதல் முறையாக மாளவிகா மோகனன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனின் அடுத்து நடிக்கும் 'தங்கலான்' படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Malavika Mohanan about pa Ranjith Vikram Thangalaan Movie

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

Malavika Mohanan about pa Ranjith Vikram Thangalaan Movie

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

Malavika Mohanan about pa Ranjith Vikram Thangalaan Movie

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கலான் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,"எனவே தொடங்குகிறோம்!♥️

நான் இதுவரை செய்தவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்கிறேன். இந்த அதீத திறமையான படக்குழுவுடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது!" என மாளவிகா மோகனன் ட்வீட் செய்துள்ளார்.

Malavika Mohanan about pa Ranjith Vikram Thangalaan Movie

People looking for online information on Malavika Mohanan, Pa Ranjith, Thangalaan, Vikram will find this news story useful.