மகாராஷ்டிரா காட்டில் இருந்து வந்ததும் புதிய போட்டோ ஷூட்.. Monochrome -ல் கலக்கிய மாளவிகா மோகனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot pictures

Also Read | தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. சன்பிக்சர்ஸ் வெளியிட்ட முதல் போஸ்டர்! எப்படி இருக்கு

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot pictures

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot pictures

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இத்தாலியில் விடுமுறையை கழித்த மாளவிகா மோகனன், இந்தியா திரும்பியதும் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள தடோபா காட்டில் சஃபாரி செய்து, காட்டு விலங்குகளை புகைப்படங்கள் எடுத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அந்த போட்டோக்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இச்சூழலில் மாளவிகா மோகனன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan Latest Monochrome Photoshoot pictures

மோனோ க்ரோம் தன்மையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. இந்த புகைப்படங்களுக்கு வெள்ளை கருப்பு நிற எமோஜிகளை பதிவிட்டுள்ளார்.

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

Also Read | ரசிகருக்காக இலியானா பகிர்ந்த வைரல் பிகினி போட்டோ.. 8 வருசமா பாதுகாத்து இருக்காங்க

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Latest Monochrome Photoshoot pictures

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan Latest Monochrome Photoshoot will find this news story useful.