சென்னையில பிடிச்ச இடம் இதான்.. கீர்த்தி சுரேஷை குறிப்பிட்டு 'மாஸ்டர்' மாளவிகாவின் பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் சென்னையில் தன்னுடைய பேவரைட் இடம் பற்றி ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

Malavika mohanan favourite place in Chennai Keerthi Suresh

Also Read | அருண் விஜய் & ஹரி இணைந்த ‘யானை’… சென்ஸார் & டிரைலர் பற்றி வெளியான Exciting தகவல்!

மல்லுவுட், பாலிவுட், கோலிவுட்….

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனின் மகள் ஆவார்.  ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Malavika mohanan favourite place in Chennai Keerthi Suresh

மாஸ்டர் ‘சாரு’…

ஆனால் மாளவிகா மோகனன் பரவலாக அறியப்பட்டது விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலமாகதான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன்.  அவர் நடித்திருந்த சாரு கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. மாஸ்டருக்குப் பிறகு அவர் தனுஷோடு நடித்துள்ள மாறன் திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.

Malavika mohanan favourite place in Chennai Keerthi Suresh

ரசிகர் பட்டாளம்…

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. ரசிகர்களிடம் தொடர்ந்து இணைப்பில் இருந்துவரும் மாளவிகா அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூகவலைதளங்கள் மூலமாக பதிலளித்து வருகிறார்.

Malavika mohanan favourite place in Chennai Keerthi Suresh

Ask Malavika….

இந்நிலையில் தற்போது டிவிட்டரில் #AskMalavika என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் “சென்னையில் உங்களுக்கு பிடித்த இடம் எது?’ என்று கேட்க, அதற்கு அவர் “கீர்த்தி சுரேஷின் வீடு. அவரிடம் மிகவும் அழகான வீடு உள்ளது. அங்கு சென்றால் உங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Malavika mohanan favourite place in Chennai Keerthi Suresh

People looking for online information on Chennai, Keerthi Suresh, Malavika Mohanan, Malavika mohanan favourite place will find this news story useful.