அப்போ மாலத்தீவு.. இப்போ இத்தாலி! புதிய போட்டோக்களை வெளியிட்டு கலக்கிய மாளவிகா மோகனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Latest Photos from Italy Gardone Riviera

Also Read | சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் மோதும் சமுத்திரக்கனி.. வெளியான பரபர சூப்பர் மாஸ் SVP டிரெய்லர்!

கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

Malavika Mohanan Latest Photos from Italy Gardone Riviera

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

Malavika Mohanan Latest Photos from Italy Gardone Riviera

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Malavika Mohanan Latest Photos from Italy Gardone Riviera

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

Malavika Mohanan Latest Photos from Italy Gardone Riviera

இந்நிலையில் இன்று புதிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். இத்தாலியில் நாட்டின் Gardone Riviera நகரத்தில் உள்ள கர்டா ஏரிக்கரையில் உள்ள ஹோட்டல் பெல்லா ரிவாவில் இருந்து இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan Latest Photos from Italy Gardone Riviera

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

அப்போ மாலத்தீவு.. இப்போ இத்தாலி! புதிய போட்டோக்களை வெளியிட்டு கலக்கிய மாளவிகா மோகனன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Latest Photos from Italy Gardone Riviera

People looking for online information on Italy Gardone Riviera, Malavika Mohanan, Malavika Mohanan Latest Photos will find this news story useful.