விஜய் பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. ரசிகர் கேள்விக்கு சூப்பர் பதில் கொடுத்த மாளவிகா மோகனன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

Actress Malavika Mohanan Latest Tweet about Actor Thalapathy Vijay

Also Read | தமன்னா, பூஜா ஹெக்டே உடன் உணவருந்திய A. R. ரஹ்மான்.. கூட யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில்  2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

Actress Malavika Mohanan Latest Tweet about Actor Thalapathy Vijay

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Actress Malavika Mohanan Latest Tweet about Actor Thalapathy Vijay

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

Actress Malavika Mohanan Latest Tweet about Actor Thalapathy Vijay

இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்களுடன் நடிகை மாளவிகா மோகனன் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விக்கும் நடிகை மாளவிகா பதில் அளித்தார். அதில் ஒரு ரசிகர் நடிகர் விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Actress Malavika Mohanan Latest Tweet about Actor Thalapathy Vijay

அதில், "விஜய் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் நான் அவரைப் பற்றி முன்பே நிறைய சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் இங்கே, யாராவது மறந்துவிட்டால் மீண்டும் சொல்கிறேன்- அவர் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பார் & நான் எங்கிருந்தாலும் அல்லது யாருடன் பணிபுரிந்தாலும் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார்". என மாளவிகா மோகனன் கூறினார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Actress Malavika Mohanan Latest Tweet about Actor Thalapathy Vijay

People looking for online information on Malavika Mohanan, Malavika Mohanan Latest Tweet, Thalapathy Vijay will find this news story useful.