www.garudabazaar.com

காதலர் தினத்தில் ரொமாண்டிக் சர்ப்ரைஸ்.. பனியே உறைந்து போகும் காதல் ப்ரபோஸ்.. Radhe Shyam Glimpse!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காதலர் தினத்தையொட்டி பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Glimpse of Radhe Shyam movie starring Prabhas and Pooja Hegde

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ் . இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,  ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'.

ரெட் ஜெயன்ட் மூவிஸ்

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் தமன்.S பின்னணி இசை சேர்க்கிறார்.  ராதே ஷ்யாம் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Glimpse of Radhe Shyam movie starring Prabhas and Pooja Hegde

ராதே ஷ்யாம் ரிலீஸ் எப்போது?

பத்து ஆண்டுகளுக்கு பிறகு 'ராதே ஷியாம்' படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் பாடல், டீசர் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  கொரோனா ஊரடங்கு காரணமாக 'ராதே ஷ்யாம்' படமும் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.  பின்பு காதலர் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி போனது. அப்போது, படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தை வெளியிட முடியாது எனவும், விரைவில் திரையரங்குகளில் சந்திக்கலாம் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், இப்படம் வருகிற மார்ச் 11-ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Glimpse of Radhe Shyam movie starring Prabhas and Pooja Hegde

காதலர் தினம் கொண்டாட்டம்

காதலர் தினமான இன்று ராதே ஷ்யாம் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது வேலண்டைன்ஸ் கிளிம்ப்ஸ் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ரொமாண்டிக் சர்ப்ரைஸாக வெளிவந்துள்ள க்ளிம்ப்ஸ் பிரபாஸ் ரோமியோவாக பூஜா ஹெக்டேவை காதலிக்க சுற்றி திரியும் இளைஞனாக, அவருக்கு எப்போ கல்யாணம் என்ற கேள்விக்குறியோடு முடிகிறது. ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியானதால் இதனை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து, பிரபாஸ் ஆடி புரூஷ்,  ஸ்பிரிட், சலார் போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Glimpse of Radhe Shyam movie starring Prabhas and Pooja Hegde

People looking for online information on Glimpse, Lovers Day Special, March 11 Release, Pooja Hegde, Praphas, Radhe Shyam, Teaser will find this news story useful.