www.garudabazaar.com

ஹன்சிகா நடிக்கும் புதிய படம்.. கிளாப் போர்டு அடிச்ச விஜய் சேதுபதி.. பரவும் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 14, பிப்ரவரி, 2022: இயக்குநர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நிகழ்ந்துள்ளது. 

Hansika new film vijay sethupathi in pooja viral photos

தயாரிப்பாளராகும் இயக்குநர்

நடிகர் சிம்புவின் நடிப்பில் வாலு, விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் சங்கத்தமிழன் போன்ற திரைப்டங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தான் தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பரிமாணத்தில் களமிறங்கியுள்ளார்.

கூகுள் குட்டப்பன் இயக்குநர்கள்..

ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர்கள் சபரி கிரீசன், சரவணன் இயக்குகிறார்கள். இவர்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிப்பில் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர்கள்.

படக்குழுவினர்

பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் போர்டை அடிக்க, KS ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார். இதர நடிகர்கள் மற்றும் தொழிநுட்பக்கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும். 

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகவிருப்பதாக கூறப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. 

Also Read: பயந்துட்டாங்க.. நீ எண்ட்ட பேசாத - கமல் முன்னாடி சண்டை கட்டிய வனிதா & சுஜா

தொடர்புடைய இணைப்புகள்

Hansika new film vijay sethupathi in pooja viral photos

People looking for online information on Google kuttappan, Hansika, Ks ravikumar, Silambarasan TR, Vijay Sethupathi will find this news story useful.