www.garudabazaar.com

இது நம்ம ஆளு டாஸ்க்.. காதல் தோல்வியில் தவிக்கும் அபிராமி.. ஆரத்தழுவி தேற்றும் சினேகன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பல சுவாரசியமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு கலகலப்பை ஏற்படுத்திய பிக்பாஸ்.

Valentine's Day Special Task Inside Big Boss Ultimate Home

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில்,  புதிய கதைக்களத்துடன் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி விஜய் டிவி.  பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி   24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் எலிமினேஷன்

இதில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, அனிதா, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரம் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். அதன்படி இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி இருந்தார்.

அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாம்  எலிமினேஷன்

அதே போல இந்த வாரம் Trending Player Of The Week பெட்ரா வனிதாவும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார். பிறகு பிக் பாஸ் இருந்து நிகழ்ச்சியில் இரண்டாம் நாமிநேஷன் நேரடியாக நடத்தப்பட்டது. அதில் சுஜா, ஜூலி, அபிநய், பாலாஜி முருகதாஸ் , தாடி பாலாஜி, தாமரை ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. இதில் இன்று காதலர் தினம் என்பதால் போட்டியாளர்கள் தாங்கள் விரும்பும் இரண்டு போட்டியாளர்களை காப்பாற்றலாம் என்கிறார் பிக்பாஸ்.

காதலர் தினம் டாஸ்க்

போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் ரோஸை கொடுக்கின்றனர். அப்போது தாடி பாலாஜி, வனிதா விஜயகுமாரிடம் மண்டியிட்டு ஹேப்பி வேலன்டைன்ஸ்டே என கூறி ரோஸை நீட்டுகிறார். அதனை பெற்றுக்கொள்ளும் வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜிக்கு ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறார். இதனை பார்த்த சக ஹவுஸ்மேட்ஸ் ஓவென கத்தி கூச்சலிடுகின்றனர். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட அடுத்த டாஸ்க்கில் "ஹவுஸ்மேட்டுகளில் யார் தங்களின் வீட்டிற்கு மாப்பிள்ளையாகவோ அல்லது மருமகளாக வர தகுதி உள்ளவர் என்று நினைக்கும் போட்டியாளருக்கு தாம்பூலத் தட்டை கொடுக்க வேண்டும்".

கண்ணீர் விட்டு கதறிய அபிராமி

வேண்டாம் என்று நினைக்கும் நபருக்கு நோ பார்க்கிங் சிம்பளை கொடுக்க வேண்டும் என்றும் காதல் செய்தால் தனக்கு முழு சம்மதம் என சொல்லும் நபருக்கு லைக் சிம்பளை கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் பிக்பாஸ். இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு தாம்பூலத் தட்டு மற்றும் லைக்கை கொடுக்கின்றனர். இதில் நிரூப் மூன்றையுமே பெறுகிறார். ஒரு கட்டத்தில் அபிராமியை தேற்றும் வகையில் கவிஞர் சினேகன் தனது முதல் காதலை மறைக்க முடியாமல் ஓடி அலையும் அபிராமியை கட்டியணைத்து ஆறுதல் தெரிவிக்கிறார். அபிராமியும் கண் கலங்குவதோடு முடிகிறது இன்றைய பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ.

தொடர்புடைய இணைப்புகள்

Valentine's Day Special Task Inside Big Boss Ultimate Home

People looking for online information on Abhirami, Balaji, BBT, Big Boss Ultimate, Disney Hot Star, Housmates, Julie, Niroop, Snegan, Sruthi, Thamarai, Vanitha, Vijay tv will find this news story useful.