www.garudabazaar.com

காதலர் தினத்தில் வெளியான ரொமாண்டிக் போஸ்டர்! இது தான் மாறன் படத்துல மாளவிகா மோகனன் பேர் போல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் புதிய போஸ்டர் அப்டேட் வெளியாகி உள்ளது.

Dhanush Malavika Mohanan Maaran Movie Valentine's Day poster

உள்ளாடை அணியாமல் பொது இடத்தில் நடமாடிய உலக அழகி.. சர்ச்சையான புகைப்படங்கள்

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். 

இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.   இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dhanush Malavika Mohanan Maaran Movie Valentine's Day poster

படத்தின் இறுதிக்கட்ட இசை அமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.  படத்தில் 4 இசைக்கோர்வைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று படத்தின் தீம் மியூசிக் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Dhanush Malavika Mohanan Maaran Movie Valentine's Day poster

ந்த படம் தியேட்டர் ரிலீசை தவிர்த்து நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி குறித்து விரைவில்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். தனுஷ் நடிப்பில் ஏற்கனவே கலாட்டா கல்யாணம், ஜகமே தந்திரம் படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Dhanush Malavika Mohanan Maaran Movie Valentine's Day poster

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு மாறன் படத்தின் புதிய  போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த போஸ்டரில் தனுசும், மாளவிகா மோகனனும் காதலர்களாக தோன்றி உள்ளனர்.

இயக்குனர் வெற்றிமாறன் வாங்கிய உலகின் விலையுயர்ந்த பிரபல BIKE! விலை எவ்வளவு தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Malavika Mohanan Maaran Movie Valentine's Day poster

People looking for online information on Dhanush, Maaran Movie, Malavika Mohanan, Valentines Day will find this news story useful.