www.garudabazaar.com

வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய அட்லி - ப்ரியா! இந்த இடத்துக்கா போயிருக்காங்க? WOW

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: அட்லி - பிரியா தம்பதியினர் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர்.

Atlee Priya Celebrates Valentines day at Raja Rani Church Viral Images

மாதவன் நடிக்கும் "Rocketry: The Nambi Effect"..! படக்குழு அறிவித்த புதிய ரிலீஸ் தேதி

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் பிகில் படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.

இருப்பினும் அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Atlee Priya Celebrates Valentines day at Raja Rani Church Viral Images

 

Atlee Priya Celebrates Valentines day at Raja Rani Church Viral Images

ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு "Lion" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தற்காலிகமாக தோராய (Tentative) தலைப்பாக இது இருக்கலாம் என்றும், படத்தின் அதிகாரப்பூர்வ (Official) தலைப்பு இனிமேல் தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய்யின் 68 வது படத்தையும் அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Atlee Priya Celebrates Valentines day at Raja Rani Church Viral Images

ஆர்யா, சந்தானம், நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடித்திருந்த ராஜாராணி படத்தில் வரும் சர்ச்சில் அட்லியும், பிரியாவும் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா! வைரலாகும் CUTE ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Priya Celebrates Valentines day at Raja Rani Church Viral Images

People looking for online information on Atlee, Priya, Raja Rani Church, Valentines Day will find this news story useful.