www.garudabazaar.com

ரெட்டை ஜடையில் ஸ்கூல் பொண்ணாக மாளவிகா மோகனன்.. வைரலாகும் கிறிஸ்டி படத்தின் நியூ லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கிறிஸ்டி படத்தில் இருந்து தனது புதிய லுக் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan Christy Movie New Look Image went viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கர்நாடகாவில் பிரபல நடிகருடன் ரஜினிகாந்த்.. ஜெயிலர் ஷூட்டிங்?.. தீயாய் பரவும் PHOTOS!

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன்  தமிழில் தோன்றியிருந்தார்.

பின்னர் தமிழில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார், மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.

Malavika Mohanan Christy Movie New Look Image went viral

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும், மேத்யூ தாமஸ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் 'கிறிஸ்டி' திரைப்படம் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும், அறிமுக இயக்குனர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும்  'கிறிஸ்டி' படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

Malavika Mohanan Christy Movie New Look Image went viral

Images are subject to © copyright to their respective owners.

காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்டி படத்தில் இருந்து தனது புதிய லுக் போட்டோவை பகிர்ந்துள்ளார். பள்ளி மாணவியாக இரட்டை ஜடை போட்டு வெண்மை & நீல நிற பள்ளிச் சுடிதார்  சீருடை அணிந்து கொண்டு இருப்பது போல ஒரு படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | பிக்பாஸ் கவின் நடித்த DADA .. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டவைரல் ட்வீட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Christy Movie New Look Image went viral

People looking for online information on Christy, Christy Movie, Malavika Mohanan, Malavika Mohanan New Look Image will find this news story useful.