www.garudabazaar.com
iTechUS

Christy : பதின்ம வயது நாயகன், ட்யூஷன் டீச்சர் நாயகி.. மாளவிகா மோகனின் 'கிறிஸ்டி'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பட்டம் போலே என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்திருந்த மாளவிகா மோகனன், ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார்.

Malavika Mohanan and Mathew Thomas next christy movie

Image Credity : Christy Trailer

இதன் மூலம் அதிகம் பிரபலமான மாளவிகா மோகனன், தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' திரைப்படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதற்கு பிறகு, தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் தங்கலான் திரைப்பிடத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இது தவிர கிறிஸ்டி என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார் மாளவிகா. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனனுடன் இணைந்து மலையாள சினிமாவின் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி, கிறிஸ்டி படத்தை இயக்கி வருகிறார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த சூழலில் சமீபத்தில் கிறிஸ்டி படத்தின் ட்ரைலரும் கூட வெளியாகி இருந்தது.

Malavika Mohanan and Mathew Thomas next christy movie

Image Credity : Christy Trailer

இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலரின் அடிப்படையில் பதின்ம வயது நிரம்பிய இளைஞர், தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொள்வது தான் மூலக்கதை என தோன்றுகிறது. இந்த வகையிலான திரைப்படங்கள் இந்திய சினிமாவில் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில் 'கிறிஸ்டி' திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரெய்லர் மற்றும் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது தான் இதை தனியாக உயர்த்தி காட்டுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் டியூஷன் டீச்சர் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் தோன்றும் சூழலில், டீன்ஏஜ் இளைஞராக மேத்யூ தாமஸ் வருகிறார்.

Malavika Mohanan and Mathew Thomas next christy movie

Image Credity : Christy Trailer

இதைப் பகிரும் ரசிகர்கள், இருவருக்கு இடையே உருவாகும் அன்புக்கு வயது, மொழி, இனம், மதம் உள்ளிட்ட எந்த ஒரு விஷயமும் பார்க்காது. அதனை மையப்படுத்திய காதல் கதையாக கிறிஸ்டி தெரிகிறது என்றும், படம் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan and Mathew Thomas next christy movie

People looking for online information on Christy, Malavika Mohanan, Mathew Thomas will find this news story useful.