www.garudabazaar.com

"லேடி சூப்பர் ஸ்டார்னு பொதுவாதான் சொன்னேன்.. நயன்தாரா மேல மரியாதை இருக்கு" - மாளவிகா மோகனன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

Malavika Mohanan Clarification Tweet about Lady Superstar and Nayanthara

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சித்தார்த் & கியாரா திருமணம்.. வேறமாரி சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர் - ராம் சரண் - தில் ராஜூ!

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன்  தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார்.

Malavika Mohanan Clarification Tweet about Lady Superstar and Nayanthara

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், மேத்யூ தாமஸ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் 'கிறிஸ்டி' திரைப்படம் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும், அறிமுக இயக்குனர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும்  'கிறிஸ்டி' படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

Malavika Mohanan Clarification Tweet about Lady Superstar and Nayanthara

Images are subject to © copyright to their respective owners.

காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில், "எனது கருத்து பெண் நடிகர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லைப் பற்றியது (லேடி சூப்பர் ஸ்டார்) மட்டுமே. எந்த குறிப்பிட்ட நடிகையைப் பற்றியதும் அல்ல.

நான் நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன் & பாராட்டுகிறேன், மேலும் ஒரு மூத்த நடிகையாக அவரது நம்பமுடியாத பயணத்தை நான் பார்க்கிறேன். தயவு செய்து ரசிகர்கள் & ஊடகங்கள் அமைதியாக இருக்க முடியுமா?.  Nக்கு மட்டும் ♥️" என மாளவிகா மோகனன் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | "வடக்கனும் கிழக்கனும்".. "சக ஏழை மனிதன் தான்".. விஜய் ஆண்டனியின் பரபரப்பு ட்வீட்!

"லேடி சூப்பர் ஸ்டார்னு பொதுவாதான் சொன்னேன்.. நயன்தாரா மேல மரியாதை இருக்கு" - மாளவிகா மோகனன்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Clarification Tweet about Lady Superstar and Nayanthara

People looking for online information on Christy, Lady Superstar Nayanthara, Malavika Mohanan, Nayanthara will find this news story useful.