www.garudabazaar.com
iTechUS

"JD -ம், சாருவும் சேந்தாங்களா இல்லையா?".. மாளவிகா எடுத்த புது ரூட்.. புது Universe ரெடி Loki!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் இந்திய சினிமாவின் சிறந்த இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் பிரபலமான மாளவிகா, அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்தார். இதற்கடுத்து மாறன் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்த மாளவிகா, தங்கலான், கிறிஸ்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Malavika Mohanan about vijay master movie climax

Images are subject to © copyright to their respective owners

இதில் கிறிஸ்டி திரைப்படத்தில் மாளவிகா மோகனனுடன் இணைந்து மலையாள சினிமாவின் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி, கிறிஸ்டி படத்தை இயக்கி வருகிறார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கிறிஸ்டி படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது. மாளவிகா மற்றும் மேத்யூ ஆகியோர் இந்த டீசரில் இடம்பெற்றுள்ள சூழலில், விரைவில் ட்ரைலரும் வெளியாகும் என தெரிகிறது.

Malavika Mohanan about vijay master movie climax

Image Credit : Christy Teaser | Youtube

அதே போல, பிப்ரவரி 17 ஆம் தேதி கிறிஸ்டி திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிறிஸ்டி டீசர் வெளியானதை முன்னிட்டு, ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்தார் மாளவிகா மோகனன். அப்போது கிறிஸ்டி திரைப்படம் குறித்தும், மாளவிகா மோகனன் குறித்தும் நிறைய கேள்விகளை ரசிகர்கள் கேட்டிருந்தனர்.

இவை அனைத்திற்கும் நடிகை மாளவிகா மோகனன் அசராமல் பதிலளித்திருந்தார். அந்த வகையில், மாஸ்டர் படம் குறித்து ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு ரசிகர் சொன்ன பதிலும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Malavika Mohanan about vijay master movie climax

Images are subject to © copyright to their respective owners

மாஸ்டர் படத்தின் இறுதியில் நடிகர் விஜய் சிறைக்கு செல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனால், அவரும் மாளவிகாவும் இணைவார்களா என்பது சரிவர தெரியாது. இதனை தொடர்புபடுத்தி கேள்வி கேட்டிருந்த ரசிகர் ஒருவர், "மாஸ்டர் படத்தின் இறுதியில் என்ன நடந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?. தனது தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, JD (விஜய்) மீண்டும் சாருவை (மாளவிகா) சந்தித்தாரா?" என மாளவிகாவை குறிப்பிட்டு கேட்டிருந்தார்.

Malavika Mohanan about vijay master movie climax

Image Credit : Malavika Mohanan Twitter

இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், "நிச்சயமா. அவரு திரும்ப பார்த்தார். அதன் பிறகு அவர்கள் முறையாக காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டு மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர். Hehe" என தனது ஸ்டைலில் அசத்தலான பதில் ஒன்றை கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan about vijay master movie climax

People looking for online information on Christy, Lokesh Kanagaraj, Malavika Mohanan, Master, Vijay will find this news story useful.