சுரேந்திர ரெட்டி இயக்கத்ததில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதிப், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘ஷே ரா நரசிம்ம ரெட்டி’.

வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை,தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.இந்நிலையில் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் கோகாபட் என்ற இடத்தில் சிரஞ்சீவியின் வீடு ஒன்று உள்ளது.
அங்கு தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது, திடீரென வீடு மற்றும் செட் முழுக்க தீ பரவி எல்லாம் கருகியுள்ளது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது.